ANI
புதுதில்லி

குடியரசு தின அணிவகுப்பு, பாசறை திரும்புதல் நிகழ்ச்சி: நுழைவு அனுமதிச்சீட்டு விற்பனை நாளை முதல் தொடக்கம்!

குடியரசு தின அணிவகுப்பு, பாசறை திரும்புதல் நிகழ்ச்சி...

Syndication

நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பு, படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவு அனுமதிச்சீட்டு விற்பனை தில்லியில் 6 இடங்களில் ஜனவரி 5 முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

ஜனவரி 26ஆம் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு, 28ஆம் தேதி நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் முழு

சீருடை ஒத்திகை மற்றும் 29-ஆம்தேதி நடைபெறும் பிரதான பாசறை திரும்புதல் விழா ஆகியவற்றுக்கான நுழைவு அனுமதிச்சீட்டு விற்பனை ஜனவரி 5 அன்று தொடங்கும்.

ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கான அனுமதிச்சீட்டுகள் ரூ. 100 மற்றும் ரூ. 20 ஆகிய விலைகளில் கிடைக்கும்.

அதே சமயம் ஜனவரி 28 அன்று நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் முழு சீருடை ஒத்திகைக்கான அனுமதிச்சீட்டுகளின் விலை ரூ. 20 ஆகவும் ஜனவரி 29 அன்று நடைபெறும் படைகள் பாசறை திரும்புதல் (பீட்டிங் ரிட்ரீட் ) விழாவுக்கான அனுமதிச்சீட்டுகள் விலை ரூ. 100 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிகழ்வுகளுக்குமான அனுமதிச்சீட்டுகள் விற்பனை ஜனவரி 5 முதல் ஜனவரி 14 வரை, தினமும் காலை 9 மணி முதல் அன்றைய ஒதுக்கீடு முடியும் வரை நடைபெறும்.

நுழைவு அனுமதிச்சீட்டுகளை இணையதளத்தில் உள்ள அஹம்ஹய்ற்ழ்ஹய் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்.

ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, கடவுச்சீட்டு அல்லது மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற அசல் புகைப்பட அடையாள அட்டையை சமா்ப்பிப்பதன் மூலமும் ஆறு இடங்களில் உள்ள நேரடி விற்பனை மையங்களிலும் அனுமதிச்சீட்டுகளைப் பெறலாம். இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் நுழைவதற்கு அதே புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

நேரடி டிக்கெட் விற்பனை மையங்கள் ஜனவரி 5 முதல் ஜனவரி 14 வரை புது தில்லியில் உள்ள சேனா பவன் (எல்லைச் சுவருக்குள் கேட் எண் 5 அருகில்), சாஸ்திரி பவன் (எல்லைச் சுவருக்குள் கேட் எண் 3 அருகில்), ஜந்தா் மந்தா் (எல்லைச் சுவருக்குள் பிரதான வாயில்), நாடாளுமன்றம் (வரவேற்பு பகுதி), ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம் (கேட் எண் 3 மற்றும் 4 அருகில் உள்ள டி பிளாக்), மற்றும் கஷ்மீா் கேட் மெட்ரோ நிலையம் (கேட் எண் 8 அருகில் உள்ள இணைப்புத் தளம்) ஆகிய இடங்களில் செயல்படும்.

இந்த மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அனுமதிச்சீட்டுகள் விற்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT