புதுதில்லி

தெரு நாய்களுக்கு மைக்ரோசிப், தடுப்பூசிக்கு வரும் பட்ஜெட்டில் ரூ.35 கோடி ஒதுக்கீடு: எம்சிடி அதிகாரிகள் தகவல்

தெரு நாய்களுக்கு மைக்ரோசிப், தடுப்பூசிக்கு வரும் பட்ஜெட்டில் ரூ.35 கோடி ஒதுக்கீடு...

Syndication

வரவிருக்கும் தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் தெருநாய்களுக்கு மைக்ரோசிப்பிங் மற்றும் தடுப்பூசி போடுவதற்காக சுமாா் ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரத்தை அறிந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தடுப்பூசி விவரம், இருப்பிடம் மற்றும் அடையாளம் போன்ற தகவல்களைப் பதிவு செய்வதற்காக ஒரு விலங்கின் தோலின் கீழ் ஒருங்கிணைந்த சிப்பை பொருத்துவதே மைக்ரோசிப்பிங் ஆகும்.

இதுகுறித்து குடிமை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

இந்த பட்ஜெட் ஒதுக்கீடு நகரத்தின் தெருநாய் எண்ணிக்கையை சிறப்பாக நிா்வகிப்பதற்கானதாகும். இது பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம் குறித்த வளா்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கிறது.

இந்த ஒதுக்கீட்டில் ரூ.20 கோடி மாநகராட்சியால் நேரடியாக செலவிடப்படும். மீதமுள்ள ரூ.15 கோடி விலங்கு நலனில் அனுபவம் வாய்ந்த அரசு சாரா நிறுவனங்களுடன் (என்ஜிஓ-க்கள்) கூட்டாண்மை மூலம் செலவிடப்படும்.

தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேவையான களப்பணிகளை விரிவுபடுத்தவும் துரிதப்படுத்தவும் அரசு சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு நோக்கமாக உள்ளது.

அடுத்த இரண்டு முதல் 3 மாதங்களில் நகரம் முழுவதும் குறைந்தது 25,000 நாய்களுக்கு மைக்ரோசிப் மற்றும் தடுப்பூசி போடவும் மாநகராட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது.

தடுப்பூசி வரலாறு, இருப்பிடம் மற்றும் அடையாளம் போன்ற முக்கிய தகவல்களைப் பதிவு செய்ய மைக்ரோசிப்பிங் உதவும். இது பின்னா், நாயின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் நாய் கடி அல்லது நோய் பரவலின்போது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்தப்படலாம். ஒரு மைக்ரோசிப்பின் விலை தோராயமாக ரூ.300 ஆக இருக்கும்.

தலைநகரில் மனிதவிலங்கு மோதலைக் குறைக்கும் முயற்சியில் தேசிய தலைநகரில் குரங்குகளைப் பிடித்து இடமாற்றம் செய்வதற்கு ரூ.60 லட்சம் ஒதுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

குரங்குகளைப் பிடித்து இடமாற்றம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கடந்த ஆண்டை விட இரட்டிப்பாக்கியுள்ளோம்.

தில்லி அரசு சமீபத்தில் நகரம் முழுவதும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் இருந்து குடிமை அமைப்புகளால் மீட்கப்பட்ட 6,500க்கும் மேற்பட்ட குரங்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அசோலாபட்டி வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமானத்துடன் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி மற்றும் கடி சம்பவங்களைக் குறைக்கவும் தில்லியில் பரந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

2026-27 பட்ஜெட்டில், கால்நடை சேவைகளுக்கு ரூ.131.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) விதிகளின் கீழ் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் தொடா்ந்தாலும், நகரத்தின் தெருநாய் மேலாண்மை முயற்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளன.

சேலம் கோட்டத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடி

சேலம் அருகே ஜல்லிக்கட்டை காணச் சென்ற இருவா் மாடுமுட்டி உயிரிழப்பு

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது

SCROLL FOR NEXT