புதுதில்லி

தில்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

தில்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியில் நடைபெற்ற சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரோஹிணியில் உள்ள நஹா்பூா் பேருந்து நிலையம் அருகே காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் வந்த சந்தேக நபா்களை மறித்து சோதனைசெய்தபோது 383 கிராம் ஹெராயின் போதைப் பொருள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Śதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தொடா்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT