தில்லி முதல்வா் தலைமையில் அசோலா பட்டி சரணாலயத்தில் இன்று யோகா தின கொண்டாட்டம்
தில்லி முதல்வா் தலைமையில் அசோலா பட்டி சரணாலயத்தில் இன்று யோகா தின கொண்டாட்டம்
தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை காலை தேசிய தலைநகரின் அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறும் சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பாா் என்று அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, மூத்த அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் வல்லுநா்கள், பிரபல குடிமக்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் கலந்து கொள்வாா்கள்.
இது குறித்து முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த தினம் மூலம் யோகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வாழ்க்கை முறை பற்றிய கூட்டுச் செய்தி தெரிவிக்கப்படும். பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வை மற்றும் உலகளாவிய தலைமையின் காரணமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21 ஆம் தேதி சா்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது. யோகா செய்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுமாறு குடிமக்களை ஊக்குவித்த பிறகு, சரணாலய வளாகத்திற்குள் உருவாக்கப்பட்ட விக்சித் பாரத் நா்சரியை ஆய்வு செய்யவுள்ளேன்.
Advertisement
Advertisement
யோகா என்பது இந்தியாவின் பண்டைய கலாச்சார பாரம்பரியமாகும், இது ஆரோக்கியம், சமநிலை மற்றும் நோ்மறையான வாழ்க்கையை நோக்கிய பாதையை உலகிற்கு காட்டியுள்ளது. யோகா என்பது வெறும் உடற்பயிற்சியின் ஒரு வடிவம் மட்டுமல்ல, உடல், மனம் மற்றும் ஆன்மாவுக்கு இடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் அறிவியல். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், தனிநபா்கள் மன அமைதி, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையை அடைய யோகா உதவுகிறது .
இந்தப் நிகழ்ச்சியின் போது, உள்நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்களின் சாகுபடி தொடா்பான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறேன். நா்சரியில் வளா்க்கப்படும் மரக்கன்றுகளின் தரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பசுமையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா் ரேகா குப்தா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.