திருநெல்வேலி

மயிலாடுதுறை வழி சென்னைக்கு ரயில்:​ கட்டணம் அறிவிப்பு

திருநெல்வேலி, மே 3: திருச்செந்தூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட உள்ள வாராந்திர விரைவு ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்ச

தினமணி

திருநெல்வேலி, மே 3: திருச்செந்தூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட உள்ள வாராந்திர விரைவு ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக வாரத்தில் வியாழக்கிழமைதோறும் சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் சென்னையில் இருந்து ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் வந்து அடைகிறது.

இந்த ரயில் ஜூலை 29ஆம் தேதி முதல் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது.

திருச்செந்தூர்-சென்னை இடையே தொலைவு 777 கி.மீ. முன்பதிவு கட்டணம் இரண்டு அடுக்கு ஏ.சி. ரூ. 1082, மூன்றடுக்கு ஏ.சி. ரூ. 787, இரண்டாவது வகுப்பு படுக்கை ரூ. 290. முன்பதிவில்லா கட்டணம் ரூ. 149.

நெல்லை-சென்னை இடையே தொலைவு 715 கி.மீ. முன்பதிவு கட்டணம் இரண்டு அடுக்கு ஏ.சி. ரூ. 1028, மூன்றடுக்கு ஏ.சி. ரூ. 749, இரண்டாவது வகுப்பு படுக்கை ரூ. 277. முன்பதிவில்லா கட்டணம் ரூ. 142.

ஜூலை மாதத்துக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, நாசரேத், செய்துங்கநல்லூர், நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.

மயிலாடுதுறை வழியாக இந்த ரயில் 62 கி.மீ. சுற்றி சென்னை செல்கிறது

வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 6.15 மணிக்கு திருநெல்வேலிக்கும், திருச்செந்தூருக்கு காலை 8 மணிக்கும் போய் சேரும்.

மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு இயக்கவிருக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பைப் பொறுத்து, வாரத்தில் மேலும் இரண்டு நாள்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை வரை இப்போது

இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை தாம்பரம் வரை நீடிக்கலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT