ஜன. 16 சென்னை சிறப்பு ரயிலில் முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது
திருநெல்வேலி, ஜன. 8: பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் இருந்து ஜன. 16-ம் தேதி சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கிய 10-வது நிமிடத்தில் முடிந்தது. பொங்
திருநெல்வேலி, ஜன. 8: பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் இருந்து ஜன. 16-ம் தேதி சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கிய 10-வது நிமிடத்தில் முடிந்தது.
பொங்கலையொட்டி தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. ரயில் எண் (06103) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 15-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருநெல்வேலிக்கு மறுநாள் பகல் 12.15 மணிக்கு வருகிறது.
இதே ரயில் (எண் 06104) ஜன. 16-ல் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகை முடிந்த மறுநாள் அதாவது ஜன. 16-ம் தேதி சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும், பஸ்களிலும் டிக்கெட் இல்லை என்பதால், பயணிகள் இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்ய திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முந்தைய நாள் இரவே காத்திருந்தனர்.
முன்பதிவு மையம் திறக்கும் முன் காலையில் வரிசையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு 10-வது நிமிடத்தில் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த 4-வது நிமிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் 397 பேருடன் முன்பதிவு செய்வது முடிக்கப்பட்டது. இதனால் வரிசையில் நின்ற 90 சதவிகிதம் பேர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சென்னைக்கு ஏ.சி. ரயில்: திருநெல்வேலியில் இருந்து ஜன. 13 பிற்பகல் 2.55 மணிக்கு 3 அடுக்கு குளிர்சாதன வசதியுடன் 13 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவும் சனிக்கிழமை தொடங்கியது. பொங்கலுக்கு முன் இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுவதால் பயணிகள் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது இந்த ரயிலில் 531 குளிர்சாதனப் படுக்கைகள் காலியாக உள்ளன.