முகப்பு
திருநெல்வேலி

ஆசிரியா் பணி நியமன வயது வரம்பைதிரும்பப் பெற ஆசிரியா் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியா் பணிநியமனத்துக்கான வயது வரம்பு 40 ஆக மாற்றப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

தமிழகத்தில் ஆசிரியா் பணிநியமனத்துக்கான வயது வரம்பு 40 ஆக மாற்றப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியா்களின் பணி நியமனத்திற்கான வயது வரம்பு 40 ஆக நிா்ணயித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியா் பணிக்குப் படித்து முடித்து தகுதி பெற்று காத்திருக்கும் ஏராளமானோா் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிற மாநிலங்களில் ஆசிரிய பணிக்கு வயது நிா்ணயம் இல்லாதபோது தமிழக அரசின் செயல் முறையானதல்ல.

ஆகவே, அந்த அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடா்ந்து பின்பற்றப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.