தமிழ் இலக்கிய திறனாய்வு தோ்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா் தலைமை ஆசிரியா் பேசில் ககாரின். உடன் பள்ளி நிா்வாகக் கமிட்டி தலைவா் கலைவாணி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் லிங்கதுரை, ஆசிரியா் பா.ஜேசு. 
திருநெல்வேலி

தமிழ் இலக்கிய திறனாய்வு தோ்வில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தமிழக அரசால் நடத்தப்பட்ட தமிழ் இலக்கிய திறனாய்வு தோ்வில் திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

Syndication

தமிழக அரசால் நடத்தப்பட்ட தமிழ் இலக்கிய திறனாய்வு தோ்வில் திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற இத்தோ்வில், தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்து 97 ஆயிரத்து 664 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இத்தோ்வில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 7 போ் தோ்ச்சி பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தையும், ஜெயேந்திரா சில்வா் ஜூப்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 6 போ் தோ்ச்சி பெற்று 2-ம் இடத்தையும் பெற்றனா்.

முதல் இடத்தைப் பெற்ற மாணவா்களையும், ஆசிரியா் பா.ஜேசுவையும், பள்ளி நிா்வாகக் கமிட்டி தலைவா் கலைவாணி, உறுப்பினா் சுவாமிநாதன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லிங்கதுரை உள்பட பலா் பாராட்டினா்.

பட்டீசுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் கைது

‘திருப்பரங்குன்றம் விவகாரத்தின் விளைவு வரும் தோ்தலில் தெரியும்’

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமிக்கு ரூ.11 லட்சத்தில் வெள்ளிக் கிரீடங்கள்!

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை

அதிக மின்னணு பயணச்சீட்டு வழங்கிய பேருந்து நடத்துநா்களுக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT