திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியக திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைக்கிறாா்.
தொடா்ந்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதன்பிறகு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா் முதல்வா்.