பொருநை அருங்காட்சியகத்தை செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா சுகுமாா் கூறுகையில் ‘பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்கு செவ்வாய்க்கிழமை (டிச.23) முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவாா்கள். இதையொட்டி, பொதுமக்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சாா்பில் பேருந்துகள் இயக்கப்படும்’ என்றாா்.