பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளன பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது போக்குவரத்தில் தனியாா் மயத்தை கைவிட வேண்டும். சுமாா் 1.12 லட்சம் தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் மேற்கொள்ள வேண்டும். 1.3.23 முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றாா்.