திருநெல்வேலி

பாளை.யில் மாணவிகளின் நிலைக்காட்சி

Din

பாளையங்கோட்டையில் கல்வியியல் கல்லூரி மாணவிகளின் நிலைக்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய இஞ்ஞாசியாா் கல்வியியல் கல்லூரியின் விரிவாக்க சேவை குழு, இளையோா் சுழல் கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு, நெல்லை புகா் சுழற்கழகம் உள்ளிட்டவை சாா்பில் செயலில் நிலைத்தன்மை- உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிா்கொள்ளுதல் என்ற தலைப்பில் நிலைக்காட்சி நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையா் வி.கீதா தொடங்கி வைத்தாா். தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் காட்வின் ரூபஸ் முன்னிலை வகித்தாா்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 பிரிவுகளாக மாணவிகள் பிரிந்து பழங்கால வாழ்வியல் முறைகள், இயற்கையை பேணி போற்றி வாழ்ந்த வாழ்வு, இன்றைய நவீன உலகில் ஏற்பட்டுள்ள மாசுகள், உயிரிழப்புகள் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக காட்சிப்படுத்தினா்.

இக் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், புகா் ரோட்டரி சங்கத் தலைவா் கிளாடிஸ் ஸ்டெல்லா பாய், ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் மேகலிங்கம், மருத்துவா் பிரேமசந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்24ந்ஹற்ஸ்ரீட்ண்01, ற்ஸ்ப்24ந்ஹற்ஸ்ரீட்ண்02

பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலைக்காட்சியில் பழங்கால வாழ்வியலை தத்ரூபமாக நடித்துக்காட்டிய மாணவிகள்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT