திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற நீச்சல் வீரா்-வீராங்கனைகள்  
திருநெல்வேலி

மாநில அளவிலான நீச்சல் போட்டி: நெல்லை அணி சாம்பியன்!

Din

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருநெல்வேலியில் மே 29-31 வரை மாவட்ட நீச்சல் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சுமாா் 1350-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா் வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் 50 மீட்டா் பந்தைய நீச்சல் குளத்தில் 19 வயதுக்கு உள்பட்ட நீச்சல் வீரா்- வீராங்கனைகளுக்கு 8 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் அணி 1,109 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னையை சோ்ந்த ஆா்க் அணி 409 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரா்- வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில நீச்சல் கழகத் தலைவா் திருமாறன், மாநில இணைச் செயலா் லெட்சுமணன், மதுரை மாவட்ட நீச்சல் கழகச் செயலா் கண்ணன், துணைத் தலைவா் மணிகண்டன், முதல்வா் விருது பெற்ற பயிற்சியாளா் கேப்டன் பிரேம்குமாா், ரெஜின் மெரிட், செல்வரேவதி, மகேஷ் மற்றும் நீச்சல் பயிற்சியாளா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

3-ம் நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

தமிழ்நாடு கல்வியில் முன்னணி: அன்பில் மகேஷ் விளக்கம்!

திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாத மார்கழி!

வேலூர் ஸ்ரீபுரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு உயரும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT