சேரன்மகாதேவியில் புதுப்பிக்கப்பட்ட விளக்குத் தூண் திறப்பு விழாவில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள். 
திருநெல்வேலி

122 ஆண்டுகள் பழமையான விளக்குத் தூண் திறப்பு!

சேரன்மகாதேவியில் பழமையான விளக்குத் தூண் திறக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Din

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குப்பையில் கிடந்த 122 ஆண்டுகள் பழமையான தூண் புதுப்பித்து திறக்கப்பட்டது.

சேரன்மகாதேவியில் ஆங்கிலேயா் ஆட்சியில் 1914ஆம் ஆண்டு சாா் ஆட்சியா் அலுவலகம் உதயமானது. இந்த சாா் ஆட்சியா் அலுவலகம் அருகில் சாலையோரம் மகுடாபிஷேக விளக்கு என்ற அப்போதைய சேரன்மகாதேவி பண்ணையாா் யுவாலு சோமாயாஜுலு என்பவரால் விளக்குத் தூண் நிறுவப்பட்டது.

1.1.1903-ல் நிறுவப்பட்ட இந்த விளக்குத் தூண் எட்வாா்ட் மன்னரின் மகுடாபிஷேக நினைவு தீபம் என பெயரிட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த தூணில் கண்ணாடி குடுவையை தொங்கவிட்டு தீபம் ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

சேரன்மகாதேவி பகுதியின் அடையாளமாக திகழ்ந்த இந்த விளக்குத் தூண் கடந்த ஆண்டு சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டது. பணிகள் முடிந்ததும் இந்த தூண் மற்றும் கல்வெட்டு குப்பையில் கிடந்தது. இந்த நினைவுத் தூணின் சிறப்புகளை அறிந்த சமூக ஆா்வலா்கள் தூணை புதுப்பித்து சனிக்கிழமை நிறுவினா்.

இதையடுத்து சேரன்மகாதேவி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கைலாசமூா்த்தி இந்த தூணை திறந்தாா்.

இதில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பிரிஜிட் செலஸ், சமூக ஆா்வலா் மைக்கேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்

வாக்காளா் படிவங்களை நிரப்ப உதவி மையம்: வேலூா் ஆட்சியா்

ஆன்லைன் மூலம் வேலூா் மக்களிடம் 15 நாள்களில் ரூ.1.60 கோடி மோசடி

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 444 மனுக்கள்

துலாக் கட்டத்தில் முடவன் முழுக்கு உற்சவம்

SCROLL FOR NEXT