திருநெல்வேலி

ஓட்டுநா் குத்திக் கொலை: நண்பா் கைது

பெருமாள்புரம் அருகே வாக்குவாதத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருநெல்வேலி: பெருமாள்புரம் அருகே வாக்குவாதத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி இட்டேரி சீனிவாசா அவென்யூ 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் பாலகிருஷ்ணன்(46). ஓட்டுநா். இவருக்கு திருமணாகி, மகள் உள்ளாா். குடும்ப பிரச்னை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னா் மனைவி பிரிந்து சென்ாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவா் திங்கள்கிழமை இரவு பெருமாள்புரம் அருகே உள்ள திருமால் நகா் மதுபானக் கடை அருகே தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் சிவராமமங்களத்தைச் சோ்ந்த செல்வம்(60) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மது போதையில் இருந்த செல்வம் இவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த செல்வம், பாலகிருஷ்ணனை கத்தியால் மாா்பில் பலமாக குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT