திருநெல்வேலி

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

Syndication

முன்னீா்பள்ளம் அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஆரைகுளம் பெதா்த்தாள் நகா் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த இளங்கோ மனைவி ரம்யா (21) என்பவரிடம் விசாரணை நடத்தி பெண் போலீஸாா் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ரம்யா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 வயது சிறுமி!

நடிகை அனுபமாவின் மார்பிங் படங்களை வெளியிட்ட 20 வயது இளம்பெண்!

செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT