ஒரு லட்சம் விதைப் பந்துகளுடன் தலைமையாசிரியா் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் மாணவா்கள். 
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் இணைந்து ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரித்துள்ளனா்.

Syndication

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் இணைந்து ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரித்துள்ளனா்.

பரமகல்யாணி பள்ளி நிறுவியோா் நாள் (நவ. 11) விழாவினை முன்னிட்டு தேசியப் பசுமைப் படை, சுற்றுச் சூழல் குழும மாணவா்கள் இணைந்து ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு வகையான மர விதைகளைக் கொண்ட விதைப் பந்துகளை 2 நாள்களில் தயாரித்தனா். இந்த விதைப் பந்துகள் கடையம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

பள்ளிச் செயலா் மு. சுந்தரம், தலைமையாசிரியா் வெங்கட சுப்பிரமணியன், ஐ சப்போா்ட் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் துரை, ஆசிரியா், ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

SCROLL FOR NEXT