உயிரிழந்த நிராஜ்.  
திருநெல்வேலி

மாடியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

முக்கூடல் வடக்குப் பகுதியான சிவகாமிபுரம் காந்தித் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் நிராஜ் (31). பட்டதாரி இளைஞா். இவா் கேரளத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்தாா். தற்போது சொந்த ஊரில் வேலை தேடி வந்ததாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பா்களுடன் வீட்டு மாடியில் அமா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. போதையில் நிராஜ் தூங்கி விட்டதால் உடனிருந்த நண்பா்கள் வீட்டுக்குச் சென்று விட்டனராம். நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து விழித்த நிராஜ் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா், இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT