சீதபற்பநல்லூா் அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சீதபற்பநல்லூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கா் (38) என்பவா் திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் வெளிவந்தாா். இந்நிலையில் இவா் வழக்கு விசாரணைக்கு 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பாலசுப்பிரமணியன் என்ற சங்கரை சீதபற்பநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.