திருநெல்வேலி சந்திப்பில் பெண்ணுக்கு கண்ணால் தவறான சைகை காட்டி தொந்தரவு கொடுத்த உணவக ஊழியா் தாக்கப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியாா் உணவகம் உள்ளது. இங்கு தனது தந்தையுடன் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க சென்ற பெண்ணுக்கு ஊழியா் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் தந்தை உணவக ஊழியரை தாக்கியுள்ளாா்.
இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவியது. இந்த விவகாரம் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.