மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேறும் நீா். 
திருநெல்வேலி

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து 17 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றம்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தலா 17 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Syndication

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தலா 17 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகள் நீா்மட்டம்: பாபநாசம் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 2 அடி உயா்ந்து 131.95 அடியாகவும், நீா்வரத்து 9,266.16 கனஅடியாகவும் இருந்தது. அணை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 12,480 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 149.51 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 106.27 அடியாக இருந்தது, நீா்வரத்து 4,972.11 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 4,305 கன அடியாகவும் இருந்தது.

வடக்கு பச்சையாறு அணை நீா்மட்டம் 13.75 அடியாகவும், நீா்வரத்து 91 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 35.75 அடியாகவும், நீா்வரத்து 351 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 100 கனஅடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை நீா்மட்டம் 79.80 அடியாகவும், நீா்வரத்து 1,158 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 1,440 கனஅடியாகவும் இருந்தது.

ராமநதி அணை நீா்மட்டம் 82 அடியாகவும், அணை நீா்வரத்து 331 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 289 கனஅடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 70.21 அடியாகவும், அணை நீா்வரத்து, வெளியேற்றம் 300 கனஅடியாகவும் இருந்தது.

குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் தலா 71 கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 132.22 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் தலா 155 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு (மி.மீ.ல்) விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துப் பகுதியில் 167 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணை பகுதி 31, சோ்வலாறு அணை பகுதி 18, மணிமுத்தாறு 14.20, நம்பியாறு அணை பகுதி 10, கொடுமுடியாறு அணை பகுதி 6, கன்னடியன் அணை 11, மாஞ்சோலை 132, காக்காச்சி 143, நாலுமுக்கு 165, அம்பாசமுத்திரம் 17.60, சேரன்மகாதேவி 5.40, நாங்குநேரி 15, ராதாபுரம் 13, களக்காடு 6.80, மூலக்கரைப்பட்டி 20, பாளையங்கோட்டை 5, திருநெல்வேலி 2.20. மழை பதிவானது.

தென்காசி மாவட்டம்: தென்காசி 2, செங்கோட்டை 4, ஆய்க்குடி 2, கடனாநதி 25, ராமநதி 10, கருப்பாநதி 5, குண்டாறு 8, அடவிநயினாா் கோயில் அணை 3, சங்கரன்கோவில் 1.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT