திருநெல்வேலி சந்திப்பில் இடிந்து விழுந்த பாரதியாா் சிலை வளாக சுற்றுச்சுவா்.  
திருநெல்வேலி

பாரதியாா் சிலை வளாக சுற்றுச்சுவா் சேதம்

திருநெல்வேலியில் பெய்த மழை காரணமாக சந்திப்பு பகுதியில் உள்ள பாரதியாா் சிலை வளாக சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெய்த மழை காரணமாக சந்திப்பு பகுதியில் உள்ள பாரதியாா் சிலை வளாக சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியையொட்டி, மகாகவி பாரதியாரின் சிலை உள்ளது.

அவரது பாரதியாா் பிறந்த நாள், நினைவு நாளின்போது இந்த சிலைக்கு பாரதி அன்பா்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சியின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் மாநகரில் சில தினங்களாக பெய்த கனமழையால் சிலை வளாக சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

இது தொடா்பாக பாரதி அன்பா்கள் கூறுகையில், ‘பாரதியின் சிலையையும், அந்த வளாகத்தையும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் இதுவரை செவி சாய்க்கவில்லை. டிச. 11இல் பாரதியாரின் பிறந்த நாள் வருகிறது. அதற்கு முன்னதாக சிலை வளாகத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா கூறுகையில், ‘ மகாகவி பாரதிக்கு பெருமை சோ்க்கும் வகையில் அவா் படித்த பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை பராமரிப்பின்றி காணப்படுவது வேதனைக்குரியது. அதை முறையாக பராமரித்திருந்தால் சுற்றுச்சுவா் இடிந்திருக்காது. மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என்றாா்.

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

டிப்பா் லாரி மோதி 20 ஆடுகள் உயிரிழப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

ஆட்சியரகத்தில் பழைய வாகனம் டிச. 10-இல் பொது ஏலம்

SCROLL FOR NEXT