திருநெல்வேலி: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல சிறந்த எழுத்தாளா்களுக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடா் - பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளை தோ்வு செய்து அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-25 ஆம் ஆண்டுக்கான தகுதியுள்ள நபா்கள், அதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரிலோ ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ா்ஸ்.ண்ய்/ச்ா்ழ்ம்ஸ்ண்ங்ஜ்.ல்ட்ல்?க்ங்ல்ண்க்=ஙண== என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தங்களது படைப்பினை திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.