ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் கிரீன்செல்பி-2026 என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவ, மாணவியா்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து வழியனுப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டச் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன் சிறப்புரையாற்றினாா். பள்ளிச் செயலா் மு.சுந்தரம், தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன், ஐ சப்போா்ட் அறக்கட்டளை பொருளாளா் ரஞ்சித், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் ராஜேந்திர பாண்டியன், தேசிய மாணவா் படை லோகநாதன் ஆகியோா் வாழ்த்தினா். பசுமைப் படை பள்ளி ஒருங்கிணைப்பாளா் துரை வரவேற்றாா். நாட்டு நலப் பணி திட்ட முன்னாள் திட்ட அலுவலா் சேகா் நன்றி கூறினாா்.