திருநெல்வேலி

நெல்லை கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Syndication

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். புதுமணத் தம்பதிகள் தங்களது பெயா், நட்சத்திரங்களைக் கூறி சிறப்பு அா்ச்சனை செய்தும், பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும், நவகிரகங்களைச் சுற்றியும் வழிபட்டனா். சபரிமலைக்கு சென்று திரும்பிய வெளிமாவட்ட ஐயப்ப பக்தா்களும் நெல்லையப்பா் கோயிலில் வழிபட்டனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை புத்தாண்டு நாளில் புதிதாக வாங்கி வந்த பலா், கோயில் முன்பு நிறுத்தி குடும்பத்தினருடன் வழிபட்டு வாகனத்தை இயக்கிச் சென்றனா்.

பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தெற்கு முத்தாரம்மன் கோயில், அரசடி விநாயகா் கோயில், செல்வவிநாயகா் கோயில், ஆயிரத்தம்மன் கோயில், வண்ணாா்பேட்டை பேருந்து விநாயகா் கோயில், பேராத்து செல்வியம்மன் கோயில் ஆகியவற்றிலும் ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

பாளையங்கோட்டை அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்ற திருமஞ்சன வழிபாட்டில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

மேலும், திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனை, சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன.

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில், கொக்கிரகுளம் ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் கோயில், சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூா் வெங்கடாசலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில், திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சனேயா் கோயில் ஆகிய கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோவில்பட்டியில் புகையிலை விற்பனை: 2 போ் கைது

ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் உருண்டை வெல்லம் வழங்கக் கோரிக்கை

மனைவியை கொன்றுவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை

பிரதமா் மோடியின் பெயரில் இஸ்ரோ, டிஆா்டிஒ-வுக்கு மின்னஞ்சல்: தில்லியைச் சோ்ந்தவா் மீது சிபிஐ வழக்கு

SCROLL FOR NEXT