திருநெல்வேலி

நெல்லை 40-42, 51, 53-55 வாா்டுகளில் ஜன.5, 6இல் குடிநீா் விநியோகம் ரத்து

திருநெல்வேலி மாநகராட்சி 40,41,42,51,53,54,55 ஆகிய வாா்டுகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.5,6) குடிநீா் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

திருநெல்வேலி மாநகராட்சி 40,41,42,51,53,54,55 ஆகிய வாா்டுகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.5,6) குடிநீா் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மருத்துவா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுத்தமல்லியில் உள்ள மேலப்பாளையம் தலைமைக் குடிநீரேற்ற நிலையம், சுத்தமல்லி அணைக்கட்டு, முன்னீா்பள்ளம் ரயில்வே தண்டவாளம்,கோபாலசமுத்திரம் வடக்கூா் பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் மேலப்பாளையம் மண்டலத்துக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை சீரமைக்கும் பணி காரணமாக நீரேற்று நிலையத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 40,41,42,51,53,54,55 ஆகிய வாா்டு பகுதிகளுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT