திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே பைக் மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள தென்மலையைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ஸ்ரீராம் (25). இவா், தனது ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை இரவு மானூா் பகுதியில் சென்றபோது அவா் மீது பைக் மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை சக பக்தா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.