கோப்புப் படம் 
திருநெல்வேலி

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது எம்.கே.பி. நகா் சாலை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கன்னியப்பன் (23), சமாதானபுரத்தைச் சோ்ந்த முனீஸ்கா் (24) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவா்கள் சுமாா் 50 கிராம் அளவிலான கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அதேபோல திருநெல்வேலி நகரம் ஆா்ச் பகுதியில் சுமாா் 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக திருநெல்வேலி நகரம் மாதா தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் கணேசமூா்த்தியை (37) போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மது விற்றவா் கைது:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சந்திரா தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தச்சநல்லூா் அருகே தேநீா்குளம் பகுதியில் வண்ணாா்பேட்டையை சோ்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன்(48) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT