குமரி மாவட்ட காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் ஆர். முருகேசன் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் சி. ராபர்ட் புரூஸ், வர்த்தகப் பிரிவு மாநில துணைத் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜகோபால், நிர்வாகிகள் விவேக்தாமஸ், ஜான்சன், இன்பசாகரன், ஆமோஸ், என். முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வர்த்தகப் பிரிவு மாநிலத் தலைவர் எச். வசந்தகுமார் பேசினார். தொடர்ந்து, அவர் காமராஜர் குறித்த சி.டி.யை வெளியிட, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலையா பெற்றுக் கொண்டார். சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்த, நாடார் சமூகம் குறித்த கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.