கேரள அரசு பஸ்ஸில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
கேரள அரசு பஸ்ஸில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற
கேரள அரசு பஸ்ஸில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் சுகிபிரமிளா, வருவாய் ஆய்வாளர் ஜோதிஸ்குமார் மற்றும் ஓட்டுநர் ஜான்பிரைட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை களியக்காவிளை பஸ் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரள அரசு பஸ்ûஸ தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில், பயணிகள் இருக்கைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கேரள அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.