சுவாமியார் மடத்தில் மது விற்றவர் கைது
திருவட்டார் அருகே காந்தி ஜயந்தி நாளில் மது விற்பனை
திருவட்டார் அருகே காந்தி ஜயந்தி நாளில் மது விற்பனை செய்தவரை போலீஸôர் கைது செய்தனர்.
சுவாமியார்மடம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர் அங்கு சென்றபோது மதுவிற்பது தெரியவந்ததாம்.
இதுதொடர்பாக சுவாமியார்மடம் கைசாலவிளை பகுதியைச் சேர்ந்த ஜான்சனை (52) போலீஸôர் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.