நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல் நிலைப் பள்ளியில்
பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல் நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
செப். 25-ம் தேதி முகாம் தொடக்க நாள் களப்பணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எல். தேவராஜ் தலைமை வகித்தார்.
பின்னர் நடைபெற்ற முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மூலைக்கரைபட்டி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எம். சுந்தரம் தலைமை வகித்தார்.
இதில் என்.எஸ்.எஸ். அலுவலர் இ. மகாலட்சுமி, என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் ஏ. ஜெயராஜ், உதவித் திட்ட அலுவலர் ஆர். சந்திரசோமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் பேச்சிப்பாறை - கோரைக்குழி சாலை சீரமைப்பு, பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைப்பு, பள்ளி முதல் காவல் நிலையம் வரையிலான சாலை சீரமைப்பு, இலவச மருத்துவ முகாம், ஆளுமைத் திறன் வளர்த்தல், பேரிடர் மேலாண்மை, மது விழிப்புணர்வு, மதநல்லிணக்கம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
மத நல்லிணக்க முகாமுக்கு பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவர் எஸ். ராஜன் தலைமை வகித்தார். இதில் பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் எம். கிறிஸ்டோபர், என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் கே. நாகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம் நிறைவு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எல். தேவராஜ் தலைமை வகித்தார். இதில் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஜி. புஷ்பாகரன், பள்ளி ஆசிரியர் வி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.