கன்னியாகுமரி

குழித்துறை மறை மாவட்டம் 6 மறை வட்டங்களாக பிரிப்பு: ஆயர்

குழித்துறை மறை மாவட்டம் 6 மறை வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி

குழித்துறை மறை மாவட்டம் 6 மறை வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தெரிவித்துள்ளார்.

கோட்டாறு மறை மாவட்டம் பிரிக்கப்பட்டு, குழித்துறை மறை மாவட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு டிச. 22 ஆம் தேதி வாடிகனில் போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக ஜெரோம்தாஸ் வறுவேல் நியமிக்கப்பட்டார். குழித்துறை மறை மாவட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிறைவில் ஆயர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குழித்துறை மறை மாவட்டத்தில் முளகுமூடு, திருத்துவபுரம், காரங்காடு, மாத்திரவிளை, வேங்கோடு, புத்தன்கடை ஆகிய 6 மறை வட்டங்கள் செயல்படும்.

இவற்றில் முளகுமூடுக்கு ஹிலாரி, திருத்துவபுரத்துக்கு புஷ்பராஜ், காரங்காடுக்கு ஜார்ஜ், மாத்திரவிளைக்கு பால்ரிச்சர்டு, வேங்கோட்டிற்கு பெஞ்சமின், புத்தன்கடைக்கு பென்னி ஆகியோர் முதன்மை அருள்பணியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

முளகுமூடு மறை வட்டத்தின் கீழ் முளகுமூடு, மாடத்தட்டுவிளை, அப்பட்டுவிளை, முளவிளை, செட்டிச்சார்விளை, கல்லறவிளை, மணலிக்கரை, முட்டைக்காடு, மணலி, தக்கலை, கல்குறிச்சி, கப்பியறை, பள்ளியாடி, காஞ்சிரகோடு, வாள்வச்சகோஷ்டம், செறுகோல், கோழிப்போர்விளை, குழிவிளை, கூட்டமாவு, இருதயபுரம், வெள்ளிகோடு, செம்பருத்திவிளை ஆகிய பங்குகளும் சுங்கான்கடை, புலியூர்குறிச்சி ஆகிய திருத்தலங்களும் செயல்படும்.

திருத்துவபுரம் மறை வட்டத்தின் கீழ் சூசைபுரம், பாலவிளை, குழித்துறை, மருதங்கோடு, மேல்புறம், லூர்துகிரி, செறுவல்லூர், மேல்பால், நல்லாயன்புரம், பரக்குன்று, களியக்காவிளை, சூழால், பாத்திமாபுரம், சிலுவைபுரம், விரிகோடு, இருதயபுரம், மார்த்தாண்டம், பாகோடு, திக்குறிச்சி, குளப்புறம் ஆகிய பங்குகளும், வெட்டுவெந்நி திருத்தலமும் செயல்படும்.

புத்தன்கடை மறை வட்டத்தின் கீழ் ஆற்றூர், புத்தன்கடை, ஏற்றக்கோடு, தேமானூர், கொல்வேல், கடையல், மாத்தூர், அம்பலக்கடை, பாக்கியபுரம், மாஞ்சக்கோணம், கோட்டூர்கோணம், ஈஞ்சக்கோடு, நாகக்கோடு, பேச்சிப்பாறை, ஆலஞ்சோலை, குலசேகரம் ஆகிய பங்குகள் செயல்படும்.

காரங்காடு மறை வட்டத்தின் கீழ் காரங்காடு, வர்த்தான்விளை, கோணங்காடு, கல்லுக்கூட்டம், கொன்னக்குழிவிளை, நுள்ளிவிளை, கண்டன்விளை, ஆலன்விளை, முக்கலம்பாடு, பட்டர்விளை, படர்நிலம், மாங்குழி, ஆரோக்கியபுரம், மைலோடு, திருவிதாங்கோடு, வட்டம், முரசங்கோடு ஆகிய பங்குகள் செயல்படும்.

வேங்கோடு மறை வட்டத்தின் கீழ் வேங்கோடு, அம்சி, வெள்ளையம்பலம், விழுந்தயம்பலம், கம்பிளார், முன்சிறை, புதுக்கடை, தும்பாலி, காப்புக்காடு, இலவுவிளை, புல்லாணி, காஞ்சாம்புறம், வாவறை ஆகிய பங்குகள் செயல்படும்.

மாத்திரவிளை மறை வட்டத்தின் கீழ் மாத்திரவிளை, மணலிக்குழிவிளை, சகாயநகர், வெள்ளியாவிளை, துண்டத்துவிளை, பனவிளை, முள்ளங்கினாவிளை, செந்தறை, பூட்டேற்றி ஆகிய பங்குகளும், நட்டாலம் திருத்தலமும் செயல்படும் என தெரிவித்தார்.

இத் திருப்பலியில் மறை மாவட்ட குருகுல முதல்வர் மரிய அல்போன்ஸ், பொருளாளர் அகஸ்டின், செயலர் ரசல்ராஜ் மற்றும்  சகாயதாஸ், வின்சென்ட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT