கன்னியாகுமரி

ஆதார் விவரங்கள் பதிவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட 30 ஆயிரம் குடும்ப அட்டைகள்: பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

DIN

ஆதார் அட்டை பதிவை காரணம் காட்டி, குமரி மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள 30 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொருள்கள் வழங்க வேண்டும் என நாகர்கோவில் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மையத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் சுவர்ணலதா தலைமையில் நடைபெற்றது. செயலர் டாக்டர் ஜாஸ்மின் ஆசீர் வரவேற்றார்.
ஆதார் விவரங்களை குடும்ப அட்டையில் பதிவு செய்யாததை காரணம் காட்டி, மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும்.
உலக உழவர் தினம், தேசிய நுகர்வோர் தினம், நம்மாழ்வார் தினம் ஆகியவற்றை இணைத்து மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஆர்.பொன்னம்பலம், ததேயஸ், எஸ்.ஆர்.ஸ்ரீராம், ஜேசுசந்திரதாஸ், புளோரிபாய், பஜுதாபேகம், லதா ராமசாமி, ஹெலன்பேபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT