கன்னியாகுமரி

இடையன்விளை கோயில் சித்திரை கொடைவிழா மே 5 இல் தொடக்கம்

DIN

இடையன்விளை பத்திரகாளியம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெறும் கொடை விழா மே 5 ஆம் தேதி தொடங்குகிறது.
திங்கள்சந்தை அருகே உள்ள இடையன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை கொடைவிழா மே 5 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. முதல்நாள் விழாவில் கணபதி ஹோமம், சமயவகுப்பு மாணவர்,மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம், திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு, சொல்லுங்கள் வெல்லுங்கள் பரிசு குவியல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் விழாவில் பண்பாட்டுப்போட்டிகள், மாறுவேடப் போட்டி, பட்டிமன்றம் நடைபெறும். மூன்றாம்நாள் விழாவில் லட்சார்ச்சனை நாமஜெப வேள்வி, அலங்கார தீபாராதனை, சமூக நாடகம் ஆகியனவும், நான்காம்நாள் விழாவில் அபிராமி அந்தாதி பாராயணம், சிங்காரி மேளத்துடன் யானை ஊர்வலம், வில்லிசை ஆகியனவும், ஐந்தாம் நாள் விழாவில் வில்லிசை, பொங்கல், பரிசு வழங்குதல், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியனவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இடையன்விளை ஊர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT