கன்னியாகுமரி

டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: முதியவர், சிறுமி உள்பட 7 பேருக்கு சிகிச்சை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் முகாமிட்டு தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பல குழந்தைகள், பெரியவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மட்டும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 80 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் பன்றிக் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல் 15 வயது பள்ளி சிறுமி, வடசேரியை சேர்ந்த இளைஞர் உள்பட 4 பேர் டெங்கு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மாவட்டம் முழுவதம் பல தனியார் மருத்துவமனைகளில் 20- க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT