கன்னியாகுமரி

தமிழக அரசு நீடிக்கவே மத்திய அரசு விரும்புகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

DIN

மக்கள் நலன் கருதி தமிழக அரசு நீடிக்கவே மத்திய அரசு விரும்புகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
மார்த்தாண்டத்தில் ரூ.179 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பாலத்துக்காக அமைக்கவுள்ள 540 தூண்களில் 355 தூண்கள் பணி முடிக்கப்பட்டுள்ளன. 118 மேல்மட்ட தூண்களில் 21 தூண்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. பணிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும். தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
ரஜினி அரசியலுக்கு தகுதியில்லாதவர் என சீமான் கூறியது குறித்து கேட்ட போது, தமிழகத்தில் யார் எந்த தொழில் செய்ய வேண்டும், எந்த செயலை செய்ய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதை எந்த இயக்கமோ தனிமனிதனோ தடுக்கவோ எதிர்க்கவோ முடியாது. அது அவர்களின் தனி மனித விருப்பம் என தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியது: செயல்படாத அரசாக உள்ளது தமிழக அரசு. அரசு வீழ்வது மாநிலத்துக்கு நல்லதல்ல. மக்கள் நலன் கருதி தமிழக அரசு நீடிக்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அவருக்கு நடத்தும் விழா அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் விழா என்றார் அவர்.
முன்னதாக மேம்பாலம் தொடங்கும் வெட்டுவெந்நி பகுதியிலிருந்து மார்த்தாண்டம் பம்மம் பகுதி வரையிலான 2.4 கி.மீ. தொலைவு நடந்து சென்று பணிகளை அவர் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT