கன்னியாகுமரி

தக்கலையில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் விழிப்புணர்வுப் பயிற்சி

DIN

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாண்விஜயன் தலைமை வகித்தார். ஆசிரியர் டானியல் பொன்னப்பன், ஆசிரியை ஜாஸ்பின் ஜெபா  ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
 பள்ளி மாணவர்களுக்கு  விதை நேர்த்தி,  பஞ்சகவ்யம்,  அமிர்தகரைசல், தென்னை டானிக் போன்ற இயற்கை உரங்களை செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியை  கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் பெருமாள், கவிகுமார், அபினேஷ், ராமகிருஷ்ணா,  ரமேஷ்கண்ணா, விவேக், அருண்பாண்டியன்,  விஷ்ணு,  வேங்கடரமணன் ஆகியோர் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT