மனுநீதி முகாமில் நலத்திட்ட உதவிகள்
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரிமனுநீதி முகாமில் நலத்திட்ட உதவிகள்
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கொட்டாரம் வருவாய் கிராம அளவில் தனிநபர் பிரச்னை, துறை சார்ந்த பிரச்னை மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் பிரச்னைகளுக்கு மனுநீதிநாள் நடத்தி அதன் மூலம் தீர்வும், அதிகாரிகள் மூலம் உரிய பதிலும் வழங்கப்பட்டு வருகிறது. கொட்டாரம் வருவாய் கிராம அளவில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி முதல்கட்ட மனுநீதிநாள் நடைபெற்றது. இதில் 83 பேர் மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்கள் மீது நேரடியாக விசாரணை நடத்தி உரிய பதில் அளிக்கும் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக பதில் அளித்தனர்.
இந்நிகழ்வில் நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் ஆறுமுக நயினார், மயிலாடி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ்ராஜன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான், கொட்டாரம் கிராம நிர்வாக அலுவலர் செய்யது அலி பக்கீர் முகைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.