கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், தனித்துணை வட்டாட்சியர் சந்திரசேகர், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் உள்ளிட்டோர் நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை பகுதியில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக அதிக பாரத்துடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அதை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பிவிட்டாராம். தொடர்ந்து அதிலிருந்த பைகளை சோதனையிட்டதில், 400 கிலோ  ரேஷன் அரிசி பதுக்கிவைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிசல் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT