முகப்பு
கன்னியாகுமரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு  இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு  இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு  இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
 காணிமடம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் போஸ்(62).  இவர் தனது மனைவி வள்ளியம்மா மற்றும் குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
  தீவிபத்தில் பாதிக்கப்பட்ட போஸ் குடும்பத்தினருக்கு ரெட்கிராஸ் குமரி மாவட்ட கிளை சார்பில் அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சஜித் நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் செயலர் பிரேமலலிதா, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார், கார்ட் கிராம வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →