முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் நாளை இருபெரும் விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை (ஏப். 11) கல்லூரி ஆண்டு விழா, ஆராய்ச்சி மையங்களின் தொடக்க விழா உள்ளிட்ட இருபெரும் விழா நடைபெறுகிறது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:50 AM
பகிர்:

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை (ஏப். 11) கல்லூரி ஆண்டு விழா, ஆராய்ச்சி மையங்களின் தொடக்க விழா உள்ளிட்ட இருபெரும் விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரிச் செயலர் எஸ். மரிய ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விழாவில் கல்லூரி செயலர் வரவேற்கிறார். கல்லூரி முதல்வர் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். குழித்துறை மறைமாவட்ட ஆயர் வி. ஜெரோம்தாஸ், விழாவுக்கு தலைமை வகித்து பேசுகிறார்.  சிறப்பு விருந்தினராக குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமாள்சாமி கலந்துகொண்டு பேசுகிறார். தொடர்ந்து நடைபெறும் ஆராய்ச்சி மைய தொடக்க விழாவில் அருள்தந்தைகள் ரசல்ராஜ், டோமி லிலில் ராஜா, அலோசியஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள். 
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சி. இலட்சுமணன், அலுவலக மேலாளர் என். விஜயகுமார் ஆகியோர் பேசுகிறார்கள். கல்லூரி இணைச் செயலர் எஸ்.கே. ஜோஸ் ராபின்சன் நன்றி கூறுகிறார். இக்கல்லூரியின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு இக்கல்லூரிக்கு பி கிரேடு தரச் சான்று வழங்கிச் சிறப்பித்துள்ளது.  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை இந்திய அளவில் 20 ஆயிரம் கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கல்லூரி தர மதிப்பீட்டில் இக்கல்லூரி 101ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கிடையே உள்ள கல்லூரிகளில் இக்கல்லூரி 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 
இக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்றுள்ளனர். முதல்வர் பெயரில் வழங்கப்படும் விருதை தடகளப் போட்டியில் பங்கேற்ற மாணவர் ஆகல் டோனி பெற்றுள்ளார். தொடர்ந்து இக் கல்லூரியில் தமிழ், இயற்பியல், வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட துறைகளுக்கான முனைவர் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என்றார் அவர். பேட்டியின் போது கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரர ராஜன் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.