கன்னியாகுமரி

கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் ரூ. 9.80 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

DIN

கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தோவாளை ராமபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில்  பிரதமரின் கிராம சுயராஜ் அபியான் என்ற கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சமூக நீதிநாள் விழா நடைபெற்றது.  விழாவுக்கு,  மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில்,  பயனாளிகள் 24 பேருக்கு ரூ.9.80 லட்சம் மதிப்பில் தொழில் மற்றும் தனிநபர் கடனுதவி,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 800 இலவச மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை  மத்திய இணை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.  
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்,  மகளிர் திட்டம் ஆகிய துறைகள் மூலமாக திட்ட செயலாக்கம் தொடர்பான  கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் கூடுதல் ஆட்சியருமான ராஹுல்நாத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  சிவதாஸ்,  உதவி இயக்குநர்(ஊராட்சி) சையத் சுலைமான்,  மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரன்,  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வே.பிச்சை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள்,  மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பியூலா,  அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT