முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களுடன் பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு

மத்திய அரசின் திட்டங்களை ஆதிவாசி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், பேச்சிப்பாறையில் மத்திய இணை அமைச்சர்

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:01 am IST
பகிர்:

மத்திய அரசின் திட்டங்களை ஆதிவாசி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், பேச்சிப்பாறையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பழங்குடியின மக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 
அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, மத்திய அரசின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன் சார்ந்த திட்டங்களை அந்த மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலான பிரசாரங்கள் மற்றும் முகாம்களை பாஜகவினர்  நடத்தி வருகின்றனர். இதையொட்டி, பேச்சிப்பாறை சாஸ்தா கோயில் பகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பழங்குடியின மக்களைச் சந்தித்து, அவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்துப் பேசினார். மேலும், பழங்குடி மக்களுக்கு கழிப்பிடங்கள், சமையல் எரிவாயு  உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர், அந்த மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.