முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

குழித்துறை அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

குழித்துறை அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 
குழித்துறை தபால் நிலைய சந்திப்பு பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் புகை வெளியேறியது. 
தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ரசாயன பொடி மூலம் தீயை அணைத்தனர். ஏடிஎம் இயந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவியில் இணைக்கப்பட்டுள்ள மின் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. 
தீயணைப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →