கொல்லங்கோடு அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் சாவு
கொல்லங்கோடு அருகே மின்இணைப்பு பழுதை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கொல்லங்கோடு அருகே மின்இணைப்பு பழுதை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கொல்லங்கோடு அருகேயுள்ள புன்னமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். எலக்ட்ரீசியனான இவர், கடந்த 23ஆம் தேதி மின்வாரிய ஊழியர்களுடன் சென்று சிலுவைபுரம் பகுதியில் மின்கம்பத்தில் ஏறி மின்பழுதை சரிசெய்ய முயன்றாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.