முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கன்னியாகுமரி

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டச் செயலர் விஜயகுமார் எம்.பி. பேசியது: குமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர்,  பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிகளை அதிமுகவினர் கைப்பற்ற உழைக்க வேண்டும்.  
கன்னியாகுமரியில் சுற்றுச்சூழல் பூங்கா, அனந்தன்குளத்தில் படகுப் போக்குவரத்து,  நாகர்கோவில் நகருக்கு குடிநீர்த் திட்டங்கள் என பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கடல் அணையை நிபுணர் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்துள்ளனர். அங்கு புதிய அணை கட்டலாமா அல்லது அணையின் உயரத்தை அதிகப்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் ஞானசேகர்,  மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம்,  மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன், தொழிற்சங்கச் செயலர் காரவிளைசெல்வன், நகரச் செயலர் சந்திரன்,  அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் சந்தையடி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →