பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு
ஆரல்வாய்மொழி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் கொத்தன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தாம்சன். இவரது மனைவி தேவமணி (55). இவர்கள் வீட்டருகே திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த மாரி முருகன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தேவமணியும், மாரிமுருகனும், பைக்கில் மாதவலாயத்துக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றனராம். சண்முகபுரம் பகுதியில் அங்கிருந்த வேகத்தடையை மாரிமுருகன் வேகமாக கடந்தாராம். அப்போது பைக் நிலைதடுமாறியதில் பின்னால் இருந்த தேவமணி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.