கன்னியாகுமரி

வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ். விஜயதரணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து மறுகால் ஷட்டர்கள்  திறக்கப்பட்டதால் தாமிரவருணி  ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் விளையாட்டு ரயில், சறுக்கு விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை தாமிரவருணி ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 
அங்கிருந்த தொழிலாளர்கள் எனது தொகுதி பேரவை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னித்தோட்டம், கல்பாலத்தடி, திக்குறிச்சி உள்ளிட்ட பகுதி வீடுகளிலும், செங்கல் சூளையிலும் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் குழித்துறைக்கு மீட்பு குழுவை அனுப்ப வேண்டும். மேலும் பாதிப்புகள் , சேதங்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளங்களின் கரையோரம் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாவுபலி பொருள்காட்சி அரங்க தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் மழைவெள்ளத்தால் வீடுகளை இழந்தோருக்கு  உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT