முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கம்: ரப்பர் கழகத்துக்கு வருவாய் பாதிப்பு

குமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தில் தொழிலாளர்கள் கடந்த 4ஆம் தேதிமுதல் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதால், ரப்பர் கழகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:44 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

குமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தில் தொழிலாளர்கள் கடந்த 4ஆம் தேதிமுதல் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதால், ரப்பர் கழகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னரும் உடன்பாடு ஏற்படவில்லை. 
இந்நிலையில் தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்து அதன் படி செயல்படுகின்றனர். இப்போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் வழக்கமாக ரப்பர் மரங்களிலிருந்து எடுத்து வரும் ரப்பர் பாலை விட மிகக் குறைந்த அளவில் எடுத்து வருகின்றனர். இதனால் ரப்பர் கழகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 
இந்நிலையில் தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என ரப்பர் கழகத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.